Organised by Sittruli Foundation and Ganga Hospitals 

On August 20th 2023 Sunday  

@ Ganga Spine Injury Rehabilitation Centre  

இந்தியாவில் சுமார் 42 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் 8.5 மில்லியன் பேர் லோகோமோட்டர் குறைபாடு உள்ளவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்துவது மற்றும் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிப்பது போன்ற கனவுகள் இருந்தபோதிலும், இன்றும் பலரால் உதவியின்றி எந்த ஒரு உள்கட்டமைப்புக்குள்ளும் செல்ல போராடுகிறார்கள்.

இதன் பொருட்டே சிற்றுளி அமைப்பு உருவானது. எங்கள் ரன் ஃபார் வீல்ஸ் மராத்தான் மூலம், சமூகத்தில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளின் உண்மையான திறன்களைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடன் கலந்துரையாடவும் எங்கள் பங்கேற்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறோம்.

இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் பாரா-விளையாட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தங்கள் ஆதரவைக் காட்டவும், தமிழ்நாடு பாரா தடகள வீரர்களுடன் இணைந்து ஓடுவார்கள்.

ஆனால் இந்நிகழ்வு அத்தோடு முடிவதில்லை. மாரத்தானுக்குப் பிறகு, பங்கேற்பாளர்களுக்கு தமிழ்நாட்டின் சக்கர நாற்காலி கூடைப்பந்து வீரர்களால் ஆற்றல்மிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியும், அதைத் தொடர்ந்து பாரா தடகளப் போட்டியில் தமிழகத்துக்காக பதக்கம் வென்ற தேசிய சாம்பியன்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் நிகழவுள்ளது. நமது குடும்பம் மற்றும் நண்பர்களை ஒரு முக்கியமான சமுதாய நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பாகும்

இந்த மறக்கமுடியாத மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வில் சமுதாயத்தில் அனைவரும் ஒன்று என்பதை ஆதரிக்கவும், விழிப்புணர்வை மேம்படுத்தவும், மாற்றுத்திறனாளிகளின் உண்மையான திறமையை அறிந்திடவும் சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனையுடன் கை கோர்த்திடுங்கள்.

– – – – – – – – – – – – – – – – –

Did you know that there are approximately 42 million people with disabilities in India, with 8.5 million of them having Locomotor Disabilities? Despite their dreams of leading a dignified life and experiencing the freedom of mobility, many individuals with disabilities struggle to navigate infrastructure without assistance. 

That’s where the Sittruli Foundation comes in. Through our RUN FOR WHEELs Marathon, we are creating an opportunity for our participants to understand and interact with the true abilities of people with disabilities while promoting inclusivity in society. This year, the participants will be running alongside with the Para Athletic Community of Tamil Nadu to show their support and raise awareness about para-sports. 

But the event doesn’t stop there. After the marathon, participants will be treated to an energetic wheelchair basketball match by Tamil Nadu’s Wheelchair Basketball Players, followed by the felicitation of national champions in para-athletics who hail from the state. The event is a celebration of inclusion, and a chance to bring together family and friends to support an important cause.  

We encourage you to join Sittruli Foundation and Ganga Hospitals in this memorable and meaningful event. Let’s come together to celebrate inclusivity, promote awareness, and support the abilities of people with disabilities. 

The Registration is closed. Kindly reach out to info@sittruli.org for slot availability